குறுகத் தறித்த குறள்

முனைவர் சிற்றரசு

நூல் பற்றி

'குறுகத் தறித்த குறள்' என்னும் இந்நூல், முனைவர் சா.சிற்றரசு அவர்களால் எழுதப்பட்டது. 1812 ஆம் ஆண்டு முதல் பதிப்பிக்கப்பட்ட திருக்குறளுக்கு இதுவரை பல உரைகள் வெளிவந்துள்ளன. அவற்றில், இந்த நூலில் 12 குறளுக்கான உரைகள் விரிவாகவும், அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு எளிமையாகவும் வழங்கப்பட்டுள்ளன.

"ஒவ்வொரு குறளுக்கும் ஆழ்ந்த பொருள் நுட்பம் உண்டு; அதை மாணவர்களும் ஆய்வாளர்களும் எளிதில் உணரக்கூடிய வகையில் நகைச்சுவை உணர்வோடும் தத்துவ ஆழத்தோடும் ஆசிரியர் விளக்கமளிக்கிறார்."

இந்நூல் மாணவர்களுக்கும், இளம் தலைமுறைக்கும், தமிழறிஞர்களுக்கும் புதிய பார்வையில் திருக்குறளைப் புரிந்துகொள்ள சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.

எழுத்தாளர் பற்றி

பேராசிரியர் சா.சிற்றரசு அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் புகழ்பாடும் மெய்க்காவல்புத்தூரில் பிறந்தவர். பழந்தமிழ் இலக்கணம், இலக்கியம், உரை ஆகியவற்றில் ஆழங்காற்பட்டவர். தொல்காப்பியம், சிலம்பு, திருக்குறள் முதலானவற்றை மூல நூல்களைப் பார்க்காமலேயே மாணவர்களுக்குப் பாடம் நடத்தி அவர்களைக் கவரும் ஆற்றல் பெற்றவர். இவருடைய இலக்கணப் பயிற்சி தமிழ் அறிஞர்களை வியக்க வைக்கும் ஆற்றலுடையது. பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாய்த் திகழ்வது இவரது தனிச் சிறப்பாகும்.

-முனைவர் மை. லூர்தூராசா கோவை